சேங்காலிபுரம் கோவில் 6

பெருமாளின் ஒரு காலில் ஆறு விரல்கள் உள்ளன . இப்பெருமாளை சேவிப்பதால் பிதுர் சாபம் நீங்குவதும், புத்திர பாக்யம் ஏற்படுவதும் , சர்பதோஷம் நீங்கி எல்லோரும் இன்பமாக வாழ அருள் புரிகிறார் . இன்றும் இங்கு எழுந்தருளியுள்ள ஜெய காரிய சித்திகர ஆஞ்சநேய சுவாமிக்கு பிரார்த்தனை செய்து பலர் வேண்டிய பலன்களை பெற்று வருவதும் ஒரு சான்று ஆகும்.

மேலும் ஸ்ரீ ருக்மிணி சதயபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி மிகவும் வரப்பிரசாதியாக விளங்கி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்து வந்த பிரம்மோஸ்ச்வம் ஸ்ரீ ராம மூர்த்தி அய்யர் த்வஜஸ்தம்பம் பிரதிஷ்டை செய்தும் ஸ்ரீ கல்யாண ராம பட்டாச்சாரியார் , ஸ்ரீ ராஜகோபல பட்டாச்சாரியார் முயற்சியால் மாசி மாதம் திருவோணத்துடன் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

No comments: