சேங்காலிபுரம் கோவில் 4

துவாபர யுகத்தில் ஜனமேஜயன் தன் தந்தையை பாம்பு கடித்த துன்பத்தினால் சர்பயாகம் என்ற வேள்வியை செய்தான் . அதனால் அவனுக்கு சர்ப தோஷம் ஏற்ப்பட்டது , அதனால் அவனுக்கும் அவன் குடும்பத்தார்க்கும் , சந்ததிகளுக்கும் கை, கால், முதலிய பாகங்கள் சுருட்டினாற் போல் ஆயிற்று . அதனால் மிகுந்த வேதனை அடைந்தான். வியாசர் முதலிய முனிவர்கள் இசேத்திரத்தின் பெருமைகளை விளக்கி கூறி தங்கி வழி படுமாறு கூறினார், அதன்படி பிரகலாத தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ வரதராஜ பெருமாளையும், ஸ்ரீ பரிமள ரெங்கநாத பெருமாளையும் குடும்பத்துடன் சேவித்து , சர்ப தோஷம் விலகி மிகுந்த ஆரோக்யத்தை பெற்றான். இதனால் மூன்று யுகமாக இந்த பெருமாள் இருப்பதாக விளங்குகின்றது.

பிறகு துவாபரயுகம் முடியும் தருணம் இவ்வாலயம் , ஸ்ரீ சுவாமி எல்லாம் பிரளயம் ஏற்பட்டு மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிறகு அந்த மண்மேட்டில் சப்பாத்தி செடிகள் முளைத்து இருந்தது....

No comments: