சேங்காலிபுரம் கோவில் 3

க்ருத யுகத்தில் நரசிம்ம அவதாரம் செய்து ஹிரண்ய கசிபுவை வதம் செய்த பிறகு பிரகலாதனுக்கு பித்ரு ஹத்தி [தந்தையை கொன்ற ] பாவம் வந்து விட்டது. அந்த தோஷத்தை போக்கி கொள்ள முனிவர்கள் சொன்னபடி சேங்காலிபுரம் ஸ்ரீ சக்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ வரதராஜ பெருமாளையும் , ஸ்ரீ பரிமள ரெங்கநாதரையும் சேவித்து சில தினங்களிலேயே அந்த தோஷம் நீங்கி பிரகலாதன் புணியவனாக விளங்கினான்.

த்ரேதா யுகத்தில் தசரத மன்னனுக்கு மூன்று மனைவியை அடைந்தும் மக்கட்பேரு இல்லாத போது வசிஷ்டர் முதலிய முனிவர்களால் சொல்லிய படி திருசேறைக்கும் , திருக்கண்ணபுரத்திற்கும் , கிழக்கு சமுத்திரம் உள்ள மேற்கு திசையில் சுமார் ௨0 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்ரீ பரிமள ரெங்கநாத பெருமாளையும் சுமார் ஒரு வருட காலம் சேவித்து வந்தார். அப்பொழுதும் அவருக்கு பெருமாள் அருள் கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் அயோத்யை திரும்புவதற்காக புறப்படும் முன் இரு தாயார்களை பார்த்து கை கூப்பும் சமயம் இரு தாயாரும் வா என்று அழைத்தார்கள் . ஸ்ரீ பெருமாளும் ஒரு கையால் தலையை ஏந்தி மன்னனை பார்த்து அஸ்வமேத யாகம் செய் நானே குழந்தையாக அவதாரம் செய்கிறேன் என்று சொன்னார். இன்றும் நாம் இந்த பெருமாளை சேவிக்கலாம்.

No comments: