அங்கே மனநிலை சரியில்லா ஒருவன் அங்கு அசுத்தம் செய்ய கூடாது என்று எல்லோரையும் தடுத்து வந்தான் . பிறகு ஒரு நாள் ஊரிலுள்ள அனைவரும் விதை முகுர்த்ததிற்கு போகும் சமயம் எல்லோரையும் வழி மறித்து இங்கு சுவாமி உள்ளது அதை பார்க்க வாருங்கள் என்று எல்லோரையும் அழைத்தான். முகுர்த்த நாளை தடுத்தால் கோபத்துடன் மண்மேட்டை வெட்டி பார்த்து சுவாமி இல்லை என்றால் உன்னை அங்கு புதைத்து விடுவோம் என்று கூறி தோண்ட துவங்கினார்கள் . அது சமயம் ஆதி கேசவனுடைய தலை தெரிய துவங்கியது . மிகவும் ஆச்சர்யம் அடைந்த மக்கள் அந்தணர்களே தோண்ட வேண்டும் என்று சொன்னதால் அந்தணர்கள் ஒரே நாளில் பாம்பு படுக்கையில் மூன்று சுற்று வரை தோண்டினார்கள். இருட்டி விட்டதால் வீடு திரும்பினார்கள்.
இரவில் எல்லோருக்கும் இதற்கு மேல் என்னை தோண்டி பார்க்க வேண்டாம் என்று கனவு வந்தது. ஆதலால் அப்படியே வைத்து ஆலயம் கட்டினார்கள். இந்த வரலாறானது சுமார் ௨0 ஆண்டுகளுக்கு முன் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்த ராம தீக்ஷதர் அவர்களுடைய பெரிய தந்தை ஸ்ரீ சுவாமிநாத தீக்ஷதர் , இப்பொழுது உள்ள ஸ்ரீ கல்யாண ராம பட்டசார்யாரின் தந்தை ஸ்ரீ பாலகிருஷ்ண பட்டசார்யாரிடம் நேரில் கூறினார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னாள் இது நடந்ததாகவும் அவர் சொன்னதாகவும் பட்டாச்சாரியார் கையால் எழுதப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment