மேற்கு திசையில் கௌதம தீர்த்தம் என்னும் புஷ்கரணியும் கிழக்கு திசையில் சிவகங்கா தீர்த்தம் என்னும் புஷ்கரணியும் தென் திசையில் பிரகலாத தீர்த்தம் என்றும் சகர தீர்த்தம என்றும் புராணம் போற்றும் புஷ்கரணி உள்ளது. இந்த புஷ்கரணியின் வடகரையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஸ்ரீ வைகுண்ட நாதர் கோவில் உள்ளது. இதை காவலர் முனிவரும் , பராசர முனிவரும் தவம் செய்ததின் பேரில் இங்கு கோவில் கொண்டு எழுந்து அருளி உள்ளார்.
ப்ருது என்னும் மன்னன் ஸ்ரீ ரெங்கநாதரை குறித்து தவம் செய்தார் . அவர் முன் காட்சி கொடுத்த நிலையிலேயே இன்றும் ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் ஆதி சேஷனை படுக்கையாக கொண்டு எழுந்தரூளியுள்ளார். தலை பாகத்தில் ஸ்ரீ தேவியும், கால் பாகத்தில் ஸ்ரீ பூமி தேவியும் அமர்ந்த கோலத்தில் முழு உருவாய் சேவை சாதிக்கின்றனர்.
No comments:
Post a Comment